Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெற்றோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளிடம் இருந்து சொத்தை மீட்க நடவடிக்கை: தஞ்சை சரக தலைவர் டிஐஜி

ஆகஸ்டு 10, 2019 04:42

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

முகாமில் வட்டாட்சியர்  பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தஞ்சை சரக காவல் தலைவர் (டிஐஜி ) லோகநாதன் சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களை பெற்றுகொண்டு அவர் பேசியதாவது:

குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்கள் கொடுக்கும் அனைத்து மனுக்கள் மீதும் மனு நீதி அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து உடனே தெரிந்து கொள்ளலாம். இதுவரை தீர்வு காணப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

அனைவரிடமும் செல்போன் உள்ளது. பொதுமக்களின் குறைகளை போக்குவதற்காகவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களை இணைக்கக்கூடிய வாட்ஸ்ஆப் குழு ஒன்று உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 

இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காண்பதுடன், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல்களை கொடுப்பதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாக இருக்கும். இந்த வாட்சஆப் குழுவை காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களில் சேவை நோக்கத்துடன் செயல்படும் யார் வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம். 

இதன் மூலம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முடியும்.
விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டலோ, படுகாயம் அடைந்தாலோ உரிய இழப்பீடு பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த குழுவில் பதிவு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய முடியும்.

தலைப்புச்செய்திகள்