Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விழுப்புரம் கோட்ட இரண்டு தமிழக அரசு பேருந்துகளை புதுச்சேரி நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்

ஆகஸ்டு 09, 2019 05:33

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பகுதி சேர்ந்த சந்துரு (வயது 16). மற்றும் சிக்கந்தர் ஆகிய இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கோரிமேடு அருகே சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்த சந்துருவின் தாய் சுமதி, மற்றும் சிக்கந்தரின் தாய் சம்சுனிசா பேகம் புதுச்சேரி கோர்ட்டில் இழப்பீடு கேட்டு முறையீடு செய்ததின் பேரில் வழக்கினை விசாரனை செய்த புதுச்சேரி நீதிமன்றம் உயிரழந்த இளைஞர்களின் இருவரின் குடும்பத்தினருக்கு  12 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து நிர்வாகத்திற்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. 

ஆனால் நீதி மன்ற உத்தரவு படி இழப்பீடு தொகையான 12 லட்சத்தினை விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து நிர்வாகம் செலுத்தவில்லை என்பதால் இன்று விழுப்புரம் அரசு பணிமனையில் இருந்து புதுவை நோக்கி வந்த விழுப்புரம் கோட்ட  2 தமிழக அரசு பேருந்துகளை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தலைப்புச்செய்திகள்