Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தை மாற்ற நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்கள் முன் வர வேண்டும்: ஜெயகரன்

ஆகஸ்டு 09, 2019 12:39

ஆவடி: சென்னை அடுத்த ஆவடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இதில் 5 க்கும் மேற்பட்ட பள்ளியை சார்ந்த 500 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சாலையில் தலைகவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளை பாராட்டியும், தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்து பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

முன்னதாக பேரணியை கொடி அசைத்து வைத்து துவக்கிய அம்பத்தூர் உதவி ஆணையர் ஜெயகரன் தமிழகம் இந்திய அளவில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை மாற்ற நாளைய தலைமுறையான மாணவர்கள் முன் வரவேண்டும்.

சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் அதேபோன்று அனைவருக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் மற்றும் ஆவடி போக்குவரத்து துணை ஆய்வாளர்கள் அமுல்ராஜ் பழனிவேல் பாஸ்கர் உமாபதி மற்றும் காவலர்கள் ஹரிபிரசாத் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்