Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் நாணய கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

ஆகஸ்டு 09, 2019 11:30

கும்பகோணம்: பழங்காலத்து நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்றன இதில் ஏராளமான மாணவ மாணவிகளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தில் தொல்லியல் நாணயவியல் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் நடக்கவுள்ள தேசிய அளவிலான 7வது நாணய கண்காட்சி இன்று தொடங்கியது. நாகேஸ்வரன் தெற்கு வீதி எம்எஸ்ஆர் மகாலில் மூன்று நாட்கள் (11ம் தேதி)வரை தினமும் காலை 9 முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது.

இதில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் உயிர் வாழ்ந்த திமிங்கலத்தின் பல் மற்றும் மம்மூத் யானையின் கடைவாய் பல்லின் ஒரு பகுதியின் படிமங்களும், 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி, சோழர் கால பெரிய செங்கல், 3 கிலோ எடை கொண்ட இரும்பு பூட்டில் 3 துவாரங்களில் 3 சாவிகளை கொண்டு 6 முறை திறந்தால் மட்டுமே திறக்கும் அதிசய பூட்டு.

குழந்தைகளுக்கான பழங்கால விளையாட்டு பொருட்கள், பழமையான எடை கற்களின் அணிவகுப்புகள், 1940ம் ஆண்டுகளில் படித்த மாணவர்களின் பள்ளி பாட புத்தகங்கள், ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற பழைய பணத் தாள்களின் கூழ், 10 ரூபாய் நோட்டில் ஒரே எண் கொண்ட 80 எண்ணிக்கை நோட்டுகள், 200 ஆண்டு பழமையான எண்ணை பிழிய பயன்படும் கருங்கல் செக்கு இயந்திரம், மரத்தை குடைந்து செய்யப்பட்ட பானை, மரத்தால் செய்யப்பட்ட தானியங்கள் அளக்கும் படிகள், பாக்குவெட்டிகள், கிராம போன்ற, சேர சோழ பாண்டியர், பல்லவர், பிரிட்டிஷ் கால நாணயங்கள் மற்றும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பலவிதமான பொருட்கள் கண்காட்சியில் உள்ளன. 50க்கும் மேற்பட்ட ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ள இப்பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். 

தொல்லியல் நாணயவியல் கழக நிறுவனர் முத்தையா மற்றும் குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்