Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறப்பு

ஆகஸ்டு 08, 2019 06:35

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  இந்நிலையில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரத்து 522 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், 6 ஆயிரத்து 149 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல், கபினி அணைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 980 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 5,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 

இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு ஏழாயிரத்து 280 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நிலையில், இதன் அளவு 11 ஆயிரத்து 149 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்