Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புனித அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

ஆகஸ்டு 06, 2019 04:29

கும்பகோணம்: நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமையான பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரோமானிய கட்டடக் கலையைக் கொண்டு கட்டப்பட்ட புனித அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட அழகிய கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்ததும், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை தேவதாஸ் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் வாண வேடிக்கைகள் முழங்க மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழாவையொட்டி புனித அலங்கார அன்னை பேராலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அலங்கார அன்னையின் ஆடம்பர தேர் பவனி வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது

தலைப்புச்செய்திகள்