Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கத்தில் மழைநீர் சேகரிப்பு பற்றி அரசுப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

ஆகஸ்டு 05, 2019 09:20

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், பிரதம மந்திரியின் ஜல் சக்தி அபிநயா திட்டத்தின் கீழ் குடிநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு செய்தி குறித்து அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை விடப்பட்டது.

அதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆலோசனையின்படி திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு குடிநீர் பற்றிய விழிப்புணர்வை அனைத்துப்   பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.  

இதைத் தொடர்ந்து இன்று, செங்கத்தை அடுத்த அந்த நூல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாணவிகள் கைகளில் குடிநீர் பற்றிய விழிப்புணர்வு பற்றிய பேனர்களை கைகளில் ஏந்தி  தெருக்களில் பாட்டுப்பாடி குடி நீர் சேமிப்பை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதற்கிடையில் தலைமை ஆசிரியர் பவானி மக்கள் மத்தியில் பேசிய போது குடி நீர் சேமிப்பை பற்றி அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார், பின்னர் மாணவ மாணவிகளும் பள்ளிக்கு மீண்டும் சென்றனர் ஊர்வலம் முடிவடைந்தது . 

ஊர்வலத்தில் மாணவ மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இவருடன் பள்ளி உதவி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்