Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

143 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய லூர்து மாதா ஆலயத்தின் புனித நீர் ஊற்றும் விழா

ஆகஸ்டு 05, 2019 04:46

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் 143 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய லூர்தன்னை ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் தமிழர் பண்பாட்டின் படி ஆலயத்திற்கு முன்பாக இயற்கையாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். 

இந்த குளத்தில் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள லூர்து மாதா ஆலயத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு  ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று புனித நீர் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனையொட்டி சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று புனித நீரானது ஆலய குளத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்