Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி

ஆகஸ்டு 05, 2019 04:01

கும்பகோணம்: கும்பகோணத்தில் தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு சார்பில் ஒன்பதாம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாய்ப்பால் மிக மிக அவசியம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு குடும்பத்தில் முழு ஒத்துழைப்பு அவசியம் தர வேண்டும்.

தற்பொழுது 54. 09 சதவீதம் தாய்ப்பால் கொடுப்பவரின் எண்ணிக்கை உள்ளது  இது மேலும் அதிகரிக்க வேண்டும் குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதனால் அழகு கெட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறு அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைந்து தாய்மார்களுக்கு அழகு ஏற்படும் இந்த தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணியை முன்னாள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பரமசிவம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாம்பசிவம் உலகநாதன் மற்றும் லயன்ஸ் சங்கம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 இப்பேரணியில் தாய்ப்பாலை பற்றி பதாகைகளை ஏந்திக் கொண்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர் நிகழ்ச்சியில் நகர மேல்நிலைப்பள்ளியில் தாய்பாலில் பற்றி கூறும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்