Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தலாக் சட்டத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

ஆகஸ்டு 05, 2019 03:52

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை ஆவணியாபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில் பயங்கரவாதத்திற்கு எதிரான முஸ்லீம்களின் தீவிரப்பிரச்சாரத்திற்கான மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டதலைவர் சிக்கந்தர்அலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில மேலாண்மைக்குழு தலைவர் சுலைமான் மற்றும் மாநில செயலாளர் இப்ராஹீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் முகம்மதுபாரூக், மாவட்ட பொருளாளர் மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக்அலி, முகமதுகவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் அயூப்கான் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பயங்கரவாதத்திற்கு எதிராக மூன்று மாதம் தீவிர பிரச்சாரத்தை ஈடுபடுவது, தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 600 இடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து பிரச்சாரம் செய்வது, முத்தலாக்கை தடைசெய்து, முஸ்லீம்களின் குடும்பத்தை சிறையில் தள்ளி சீரழிக்கும் மத்திய அரசையும், துணை போகும் அரசியல் கட்சியையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதிமுக அரசு. முத்தலாக் தடை சட்டத்தில் இரட்டைவேடம் போடுவதையும், என்ஐஏ மசோதாவை வன்மையாகயும் கண்டிக்கின்றோம். மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது, ஹெல்மேட் விழிப்புணர்வு பேரணி நடத்துவது, மருத்துவக்குடி சாலையை சீரைமக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச்செய்திகள்