Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் கஸ்தம்பாடி கிராமத்தில் நடைபெற்றது

ஆகஸ்டு 04, 2019 03:01

திருவண்ணாமலை: தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் களம்பூர் வட்டார  அரசு ஆரம்ப சுகாதார நிலையதிற்குப்பட்ட கஸ்தம்பாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் .சுந்தர்  குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் வாழியூர் மருத்துவர் கிரிதர், திருச்சுர்பேட்டை மருத்துவர்  கீதா, கேளூர் மருத்துவர்  சவீதா மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். இம் முகாமில் 733 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். 44 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது

42 நபர்களுக்கு ஈ.சி.ஜி பரிசோதனை செயப்பட்டது. இம் முகாமில் கலந்துகொண்ட  10 நபர்கள் கண் அறுவை  சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள்  சரவணன் , ராமு ,பரந்தாமன், அண்ணாமலை, அருந்தபிரசாத் , NMS  ரவிச்சந்திரன் , மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் செய்தனர், முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  ஜெயசீலன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்