Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்

ஆகஸ்டு 02, 2019 08:44

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர்  இத்தலம் சந்திரன் வழிபட்ட பெற்றதால் சந்திரன் தலமாகவும் வரகுணபாண்டியன் பெருமானை வழிபட பிரம்ஹத்தி நீங்க பெற்றதால் பிரம்மஹத்தி  தோஷம் நீங்கும் தலமாகவும் 27 நட்சத்திரங்கள் வழிபட்ட அருள்பெற்றதால் நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. 

இத்திருத்தலத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 25.07.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் சந்திரப்ரபை வாகனம் சிம்ம வாகனம் காமதேனு வாகனம் அன்னபட்சி வாகனம் கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான இன்று பிரஹத்சுந்தரகுஜாம்பிகை தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருதேரோட்டத்தை திருவாடுவதுறை ஆதினம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். 

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து வந்தனர்.

தலைப்புச்செய்திகள்