Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவ கூட்டமைப்பினர் போராட்டம்

ஆகஸ்டு 02, 2019 05:33

புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி விமானநிலையத்தை மாணவ கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டது. இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்து 

வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை வரைவினால் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு ஹிந்தித் திணிப்பும்,  தமிழகத்தின் கல்விக் கொள்கையை முற்றிலுமாக பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும் என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் கூட்டமைப்பினர் மத்திய அரசின் கீழ் லாஸ்பேட்டையில் இயங்கி வரும் விமான நிலையத்தை முற்றுகையிட்டும், புதிய கல்வி கொள்கை வரைவின் நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் ஏற்படுத்திய தடுப்பின் மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மாணவ கூட்டமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தலைப்புச்செய்திகள்