Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பங்குச் சந்தையில் ரத்தக் களறி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு

ஆகஸ்டு 01, 2019 10:10

சென்செக்ஸ் இன்று பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.3.10 மணி நிலவர்பபடி, சுமார் 500 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

இன்று காலை 37,387 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கிய் சென்செக்ஸ் சுமார் 36,694 என்கிற இறக்கத்தைத் தொட்டு தற்போது மீண்டும் கொஞ்சம் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. சரி ஏன் சந்தை திடீரென சரிகிறது..? இந்த கேள்விக்கு நம்மிடம் எட்டு காரணங்கள் இருக்கின்றன.

1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 69.20 ஆக சரிந்திருப்பது.
2. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் மேற் கொண்டு 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்காதது.
3. பயத்தினால் சந்தை வர்த்தகர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறுவது அதிகரித்திருப்பது.
4. சென்செக்ஸின் முக்கிய பங்குகளான வேதாந்தா, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் பெரிய அளவில் விலை சரிந்து வர்த்தகமாவது.
5. ஜூன் 2019 காலாண்டு முடிவுகள் வலுவாக இல்லாமல், முதலீட்டாளர்களின் செண்டிமெண்டை பாதித்துக் கொண்டிருப்பது.
6. பட்ஜெட்டில் எதிர்பார்த்த விஷயங்கள் சொல்லப் படாதது, இந்திய கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருப்பது, மேற்கொண்டு இந்திய வங்கிகள் கடன் கொடுக்க பணம் இல்லாமல் தவிப்பது, இந்தியாவில் உள் நாட்டில் நுகர்வுகள் குறைந்து காணப்படுவது.
7. பார்தி ஏர்டெல் நிறுவனம் இனி தான் தன் காலாண்டு முடிவுகளை அறிவிக்கப் போகிறது. காலாண்டு முடிவுகள் லாபமா, நட்டமா..? வருவாய் அதிகரித்திருக்கிறதா, இல்லையா..? என எதையும் பார்க்காமல், ஏர்டெல் விலை சுமார் 3% இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பது.
8. இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையின் அவுட் புட் வெறும் 0.2 % மட்டுமே ஜூன் 2019-ல் அதிகரித்திருக்கிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் போன்ற இந்தியாவின் முக்கிய எட்டு துறைகள் தான் இந்தியாவின் 40% பொருளாதாரத்தைப் பிரதிபளிக்கின்றன. அதுவே வெறும் 0.2% தான் வளர்ந்திருக்கிறது.

இப்படி எட்டு காரணங்களும் சேர்ந்து இந்தியாவின் பங்குச் சந்தையான சென்செக்ஸை துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

தலைப்புச்செய்திகள்