Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.அமோக வெற்றிபெறும்: கே.எஸ்.அழகிரி

ஜுலை 31, 2019 01:08

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காப்பேட்டை ஏரியை காங்கிரஸ் கட்சி தூர் வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலேயே முதல்முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கத்தில் இந்த துக்காப்பேட்டை ஏரியை தூர்வாரி வருகிறது. 

இதனை ஊக்குவிக்கும் விதமாக அக்கட்சி மாநில தலைவர்  கே.எஸ்.அழகிரி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நீர்நிலைகளை காத்திட தன்னார்வ தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வரவேண்டும் எனவும், நீர்நிலைகளை 
காத்திட நீர்நிலை பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட புதிய சட்டம் கொண்டுவந்து கடுமையான தண்டனை வழங்கிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வேலூரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சொந்த கட்டிடங்கள் கட்டியதாகவும் 
இதனை ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து தனது சுயலாபத்திற்காக சொந்த கட்டிடம் கட்டிய வேட்பாளரை போட்டியிடுவதை மக்கள் நினைவு கூர்ந்து அவர்களுக்கு சரியான பாடம் கற்று தருவேண்டும்  என்றும் இதனால் தி.மு.க கூட்டணி வெற்றிபெரும் என கூறினார்.

மேலும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு முனைப்போடு இருப்பதற்க்கு காரணம் அங்குள்ள கஞ்சன்மலையில் உள்ள தாதுக்களை வெட்டி நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்க்கே என குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விவசாயி என பெருமிதம் பேசுவதை நிறுத்திவிட்டு விவசாயிகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு கிடைக்காமல்
 தனியாருக்கு தாரை வார்த்துள்ளதாகவும் தமிழக அரசு துறைச்சார்பாக உரிய நடவடிக்கை எடுத்து எளிமையாக  விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கவேண்டும் என கூறினார்.  

தலைப்புச்செய்திகள்