Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர் அருகே கூலி உயர்வு கேட்டு குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஜுலை 30, 2019 10:14

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கூலி உயர்வு கேட்டு குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே கூலி உயர்வு கேட்டு பித்தளை குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலில் உற்பத்தி செய்யப்படும் பித்தளை குத்துவிளக்கு உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு 200க்கும் மேற்பட்ட குத்துவிளக்கு உற்பத்தி பட்டறைகள் இயக்கி வரும் நிலையில் அவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதை தொடர்ந்து இங்கு உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகளை மொத்த வியாபாரிகள் உற்பத்திக்கான கூலியை கொடுத்து பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினருடன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை குத்துவிளக்கு உற்பத்தி செய்ய மாட்டோம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்