Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்து நாளில் கூட்டணி இறுதியாகும்: சரத்பவார்

ஜுலை 28, 2019 05:52

மும்பை : காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணி உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், மற்ற கட்சிகளுடன் பேசி 10 நாளில் கூட்டணி இறுதியாகும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகளும், ஒரு நியமன உறுப்பினர் இடமும் உள்ளது. எனவே, 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போது பா.ஜ., தான் அங்கு ஆளும்கட்சியாக உள்ளது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார்.

அதேபோல, ஆளும் பா.ஜ., சிவசேனா கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. 

இதுகுறித்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையில் 240 இடங்களுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், மீதி உள்ள இடங்களுக்கு இதர கட்சிகளுடன் இன்னும் 10 தினங்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்,'' என்றார்.

எனினும் எந்த கட்சி அதிக இடங்களில் போட்டி, முதல்வர் பதவி யாருக்கு என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்