Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்களில் லஞ்சம் வாங்கிய வழக்கு: 6 போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் சென்னை

ஜுலை 28, 2019 03:58

சென்னை: மகாபலிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் ‘பார்’ உரிமையாளர் நெல்லையப்பன் என்பவர், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன்பாக நெல்லையப்பன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினார்கள். காஞ்சீபுரம் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மகாபலிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பாண்டி, சிரஞ்சீவி ஆகியோர் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேலு உள்பட 6 போலீஸ் அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான உத்தரவை டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று முன்தினம் இரவு பிறப்பித்தார்.

தலைப்புச்செய்திகள்