Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அப்துல் கலாம் நான்காம் ஆண்டு நினைவு தினம்: இதயா மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

ஜுலை 27, 2019 04:39

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எபிஜேஅப்துல் கலாம் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்பகுதியில் உள்ள இதயா மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது, 

இந்த நிகழ்ச்சியை சக்சஸ் அக்கடமி போலீஸ் மற்றும் இசை கோச்சிங் சென்டர் நிறுவனர் ஜெயபாபு மரக்கன்று வழங்கி மற்றும் புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரி இணைந்து நிகழ்ச்சியை வெகு சிறப்பாக  நடத்தினார். இதில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மாணவிகளுக்கு இந்தியாவை பசுமை இந்தியாவாக மாற்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என மாணவர்களுக்கு பலமுறை நினைவுபடுத்தியுள்ளார். அவர் நினைத்தது போல் மரக்கன்றுகளை நட அவரது நினைவு நாளில் முதல் முறையாக கல்லூரி மாணவிகள் சுமார் 1000 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நட்டனர்.

அப்போது கல்லூரி நிர்வாக தாளாளர் ஒவ்வொரு மாணவிகளுக்கும் 2 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளது இதனை நடுவது மட்டுமல்லாமல் அந்த மரக்கன்றுகளுக்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டு பராமரிப்பு செய்யப்படும் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள் மரக்கன்று நடுவது மிகவும் பெருமையாக கருதி இதுபோன்ற வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்த சக்சஸ் காவலர் பயிற்சி  அகாடமி  நிறுவனர் ஜெய பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். 

இதுமட்டுமில்லாமல் இனிவரும் காலங்களில் மரக்கன்றுகளை நடுவது குறிக்கோளாக வைத்துக் கொண்டு செயல்பட போவதாக மாணவிகள் பெருமையுடன் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதற்கு உறுதுணையாக சக்சஸ் காவலர் பயிற்சி மையம் செயல்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுகுறித்த விளக்கமான தகவலை கல்லூரி மாணவி ரக்ஷிதா பத்திரிகையாளர்களுக்கு கூறினார்.

தலைப்புச்செய்திகள்