Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது

ஜுலை 27, 2019 07:20

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த அரிச்சந்திரனுடைய மகன் கார்வின் பொன்குமாரின் பெயரில் தோட்டம் ஒன்று உள்ளது. தோட்டத்தில் மின்மோட்டாருக்கு மின் இணைப்பு கேட்டு தெற்கு கள்ளிகுளம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அரிச்சந்திரன் விண்ணப்பம் கொடுத்தார். மின்இணைப்பு கொடுப்பதற்கான பணிகள்  நடந்து வந்த போது, மின்இணைப்பு கொடுக்க வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அவரிடம் மின்வாரிய உதவி என்ஜினீயர் மோகன்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையாவிடம் அரிச்சந்திரன் புகார் செய்தார். அதன்பின் போலீஸ் ஆலோசனைப்படி, அரிச்சந்திரன் தனது கடையில் வந்து லஞ்ச பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு உதவி என்ஜினீயரிடம் கூறினார். அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் மோகன்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அன்றே, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரை பாளை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்