Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொந்த பணத்தில் முதல்வர் வெளிநாட்டு பயணம்

ஜுலை 27, 2019 02:35

திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆக.1 முதல் 4 வரை ஜெருசலேத்திற்கு சுற்று பயணம் செல்ல உள்ளார். இது தன் குடும்பத்துடன் செல்லும் பயணம் என்பதால் அரசுப் பணத்தை தவிர்த்து சொந்த செலவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது என முதல்வரின் செயலர் ஆர்.பி. சிசோடியா தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்