Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக முதலமைச்சராக பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்றார்

ஜுலை 27, 2019 02:02

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக 4வது முறையாக எடியூரப்பா நேற்று மாலை பதவி ஏற்றார்.  அவருக்கு ஜூலை 31ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து 105 உறுப்பினர்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வந்தது. இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை பாஜகவின் மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பவலி, மதுசாமி ஆகியோர் இரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து  நேற்று காலை 10 மணியளவில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து  நேற்று மாலை முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார்.

தலைப்புச்செய்திகள்