Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு

ஜுலை 26, 2019 12:22

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நோயாளிகளை அனுமதிக்கும் போது விவரங்களுடன் அவர்களின் மதம் குறித்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அங்குள்ள பிரபல மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் தான் அதிர வைக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் எஸ்எம்எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் அதன் துணை மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய விவரங்களுடன் அவர்களின் பெற்றோரின் மத விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என எஸ்எம்எஸ் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுதீர் பந்தாரி கடந்த ஜுலை 12ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அந்த மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் கூறுகையில், நோயாளிகளின் மதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை சேகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சி விரைவில் எங்களது மற்ற மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் என்றார்கள்.

ஏன் இந்த விவரங்களை சேகரிக்கிறார்கள் என்பது குறித்து எஸ்எம்எஸ் மருத்துவமனை சூப்பரண்டன்ட் டிஎஸ் மீனா கூறுகையில், மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், எந்த நோயால் எந்த பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அறியவும், குற்றிப்பிட்ட பகுதி மக்கள் தொகை குறித்து அறியவும், மதம், ஆணா , பெண்ணா, வயது, இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்கிறோம். இதற்கான தனி அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும் இவ்வாறு கூறினார்,
 

தலைப்புச்செய்திகள்