Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்சோ வழக்குகள் நிலுவையில் மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்றம்

ஜுலை 25, 2019 09:45

டெல்லி: போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்திருத்தம் என்பது கொண்டுவரப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்டம் தோறும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தரவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசே வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் மிக விரைவாக விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்