Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் - ஆந்திராவில் தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை

ஜுலை 25, 2019 08:15

சென்னை: தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இரும்பு கம்பி தயாரிப்பு தொழிற்சாலைகள் நடத்தி வரும் தொழில் அதிபர்களின் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தினர்.

 வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தொழில் அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று இச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

டெல்லியில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும் போது வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என நினைப்பவர்களை கடுமையாக கையாளுங்கள். வரி என்பது தண்டனை கிடையாது என கூறி இருந்தார்.

இந்நிலையில் வருமான வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் இன்று ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சோதனை முடிந்த பிறகே இது பற்றி கூற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்