Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழமை வாய்ந்த குடிநீர் குளம் தற்போது கழிவு நீர் குளமாக மாறி வரும் அவலநிலை: அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஜுலை 24, 2019 09:17

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவநாயக்கன்பேட்டையில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளுக்கும் முன் பழமை வாய்ந்த குளம். அதாவது நன்னன் - மன்னன் வாழ்ந்து வந்த பொழுது, மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி பின் குளத்தின் நடுவில் கிணறு அமைக்கப்பட்டு கிணத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்லப்பட்டு பெருமாள் கோவிலுக்கு பத்து நாள் விசேஷத்திற்கு பயன் பெறும் வகையில் அமைந்த குடிநீர் குளம் இது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை பல நூற்றாண்டுகளாக செங்கம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த பழமைவாய்ந்த குளம் இது. ஆனால் தற்போது இந்த குளம் முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது. 

இக்குளத்தை செங்கத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த நன்னன் என்ற சிற்றரசன் வெட்டியதாக கூறப்படுகிறது. இக்குளத்திற்கு குடிநீர் குளம் என்ற பெயரும் இருந்ததாகவும், மிக பெரிய பிரமாண்டமான அளவில் இக்குளம் இருந்ததாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இக்குளத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்துவந்தது. தற்போது இக்குளத்தை சுற்றிலும் விடுகள் கட்டப்பட்டு குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள விடுகளிலிருந்து வெளியேரும் கழிவுநீர் இக்குளத்தில் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. அதோடு குளத்தை சுற்றிலும் மரங்களும், புதர்கள் மன்டிக்கிடக்கிறது. 

இதேநிலை நீடித்தால் இக்குளம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என சமூக ஆர்வலர்கள் இப்பகுதி மக்கள் கவலை கொள்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்ககூடும் என கூறுவதுடன், இதை அரசு கண்டுக்கொள்ளவிட்டால் இதுபோலவே நீர் நிலைகள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கப்பட்டு நீராதாரம் அழியும் நிலை தொடரும் எனவும் எச்சரிக்கின்றனர். 

இதுவரையில் இந்த குளத்தை மீட்டெடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பது பொதுமக்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை முழுவதுமாக அகற்றி இக்குளத்தை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்கின்றனர். இதுகுறித்து நீர்நிலை மீட்பு குழுவை சேர்ந்த பிரேம் ஆனந்த் பல்வேறு தகவல்களையும் இதில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்