Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உடன்பாடு

பிப்ரவரி 19, 2019 06:03

மும்பை:  பா.ஜனதா- 25, சிவசேனா- 23 தொகுதிகளில் போட்டிஅமித்ஷா, உத்தவ் தாக்கரே கூட்டாக அறிவிப்பு. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கூட்டாக அறிவித்தனர 

இந்துத்வா கொள்கை அடிப்படையில் நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா ஆரம்ப காலம் முதல் தேர்தல்களை கூட்டணி வைத்தே சந்தித்த. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாகவே சந்தித்தன. தேர்தலையடுத்து மோடி அரசில் சிவசேனாவுக்கும் மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டது. 

பின்னர் அதே ஆண்டு இறுதியில் நடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக இரு கட்சிகளும் கூட்டணியை முறித்து கொண்டன. தனித்து போட்டியிட்டதில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வென்றது. ஆனால் ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தனித்து ஆட்சியமைத்தது. பா.ஜனதா தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவி ஏற்றார். இதையடுத்து சிவசேனாவும் பா.ஜனதா தலைமையிலான அரசில் தன்னை இணைத்து கொண்டது. 
 

தலைப்புச்செய்திகள்