Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராம நலனுக்காக இப்படி ஒரு வேண்டுதலா.? - மழை வேண்டி குறி செல்லும் பூசாரிகள்

ஜுலை 22, 2019 04:25

செங்கல்பட்டு மாவட்டம் காயார் அடுத்த கொளத்தூர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்சக்தி நிறைந்த வேண்டவராசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 500ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும்.

இந்த கோவிலின் மிகசிறப்பு ஆடிமாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள். அதிலும் கிராம நலனுக்காக சிறப்பு பிராத்தனைகளும் வழிப்பாடுகளும், மனதை நிகழவைக்கின்றன.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்க்கு மழைவரவேண்டி நிகழ்ச்சியின் முதலாவதாக வேண்டவராசி அம்மன் கோவில் பக்தர்கள் அனைவரும் கையில் காப்பு கட்சிக்கொண்டு தலையில் கரகம் சுமந்த படி கிராமம் முழுவதும் வலம் வந்து கோவிலில் இறங்கிவைத்த பின் கோவிலில் வழிபாடு நடத்தும் பூசாரிகளை முன் அமர்ந்து பம்பை உடுகை அடித்து அருள் வரவழைத்தனர்.

பின் அருள் வந்த பூசாரிகள் வேப்பிள்ளையால் தனது உடப்பை அடித்துக்கொண்டு அருளை பிரதிப்பளித்தனர்.

அதன்பின் கிராம நலனுக்காக நல்வாக்கு கூற பிராணிகளை பலி கொடுக்கும் கத்தியின் மீது நின்று அருள் வாக்கை கூறினார்கள் பூசாரிகள், அதுமட்டுமின்றி கத்தியை கொண்டு உடலில் கை மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டிகொண்டனர்.

இறுதியாக கத்தி அயுதங்களுடன் வழிப்பாடு நடத்தினர். இந்த நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருள் பெற்றுச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்