Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஜுலை 21, 2019 02:51

கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காந்தி பூங்கா முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாமகவின் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,  பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய மாவட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதால், இனியும் காலம் தாழ்த்தாமல் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 

நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய மாவட்டங்களாக செங்கல்பட்டும், தென்காசியையும் அறிவிக்கப்பட்டது போல் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர், வழக்கறிஞர்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் என  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்:
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்தார்.

இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நேற்று பாபநாசத்தில்  அனைத்து வணிக சங்க கூட்டமைப்பினர், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் நன்றி தெரிவித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை விரைவில் அறிவிக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான கோரிக்கை மனுவினை வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்