Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விடிய விடிய பிரியங்கா தர்ணா

ஜுலை 20, 2019 08:29

உத்திரபிரதேசம்: உ.பி.,யின் சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்னையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 74 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார் பிரியங்கா. பின்னர் சோன்பந்தாவுக்கு புறப்பட்ட பிரியங்காவை, போலீசார் பாதியில் தடுத்து நிறுத்தினர்.

144 தடை உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் கூறிய பிறகும் கேட்க மறுத்த பிரியங்கா, போலீசார் தடுத்ததால் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். சிறிது நேரத்தில் அவரையும் கட்சியினரையும் கைது செய்து, சுனார் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் போலீசார் விடுவித்த பிறகும், தான் அங்கிருந்த செல்ல முடியாது என பிடிவாதமாக கூறிய பிரியங்கா, மீண்டும் சாலையில் அமர்ந்து தர்ணாவை தொடர்ந்தார். இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், கட்சியினருடன் தர்ணாவை தொடர்ந்தார். நள்ளிரவு 1.15 மணியளவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சந்தித்து, தர்ணாவை கைவிடுமாறு சமாதானம் பேசி உள்ளனர். இந்த வீடியோவை பிரியங்கா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பலர் பேசியும் தர்ணாவை கைவிட மறுத்து, தன்னை அனுமதிக்கும் வரை அதே இடத்தில் தான் இருக்க போவதாக கூறி, 2வது நாளாக இன்றும் (ஜூலை 20) தர்ணாவை தொடர்ந்து வருகிறார்.

தலைப்புச்செய்திகள்