Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீ வியாச ராஜ பிருந்தாவனம் தகர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜுலை 20, 2019 07:53

கும்பகோணம்: கும்பகோணத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ வியாச ராஜ பிருந்தாவனம் சமூக விரோதிகளால் தகர்க்கப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து  ஆன்மீகவாதிகள்  ஊர்வலம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் கர்நாடக மாநிலம் ஆனே குந்தி பகுதியில் ஓடும் துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள தீவில் புண்ணிய தலமான நவ பிருந்தாவனம் என்றழைக்கப்படும் மத்வ பரம்பரையைச் சேர்ந்த 9 சுவாமிகளின் மூல பிருந்தாவனம் உள்ளது.

இதில் பிரசித்தி பெற்ற 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வியாச ராஜ பிருந்தானவம் கடந்த 17 ஆம் தேதி இரவு சமூக விரோதிகளால் தகர்க்கப்பட்டது. அங்கு அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தை மந்த்ராலய மடாதிபதி, உத்திராதி மடாதிபதி, ஸ்ரீ வியாச ராஜ மடாதிபதி, உடுப்பி மடாதிபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.  இச்சம்பவம் கர்நாடகவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள  பரம்பரையின் பக்தர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில்  சாரங்கபாணி ஸ்வாமி ஆலயத்தில் இருந்து அருகில் உள்ள ஸ்ரீ வியாச ராஜ மடத்திற்கு முழக்கமிட்டவாறு  ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பகுதியைச் சேர்ந்த உத்திரட்டாதி மடம், ஸ்ரீவியாச ராஜ மடம், விஜயேந்திர சுவாமி மடம் ஆகிய மடங்களைச் சேர்ந்த பக்தர்களும் மற்றும் பிராமணர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ வியாச ராஜ பிருந்தானவனத்தை தகர்த்த சமூக விரோதிகள் மீது மத்திய அரசும், கர்நாடக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் அங்கு பதற்றம் தணியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

தலைப்புச்செய்திகள்