Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் மக்களவை தேர்தல்: பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக

ஜுலை 19, 2019 07:09

சென்னை: வேலூர் மக்களவை தேர்தல்- அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  சட்டமன்ற தொகுதி வாரியாக 209 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.  அவர்கள் அமைச்சர் கே.சி. வீரமணி, ரவி எம்.எல்.ஏ  ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்பூர் - கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

குடியாத்தம் - வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி

வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்

கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி

அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக வை விட  அதிமுக  3 மடங்கு அதிக  பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்