Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேச்சுவார்த்தை முடிந்து விட்டது இனி நடவடிக்கை தான்: பிரதமர் மோடி உறுதி

பிப்ரவரி 18, 2019 12:24

புல்வாமா தாக்குதலை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலை முடிந்து விட்டது, இனி நடவடிக்கைதான் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மக்ரியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தயங்க கூடாது.  ஜி20 நாடுகள் தன்னுடைய அறிக்கையை செயல்படுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக  இந்தியாவும், அர்ஜெண்டினாவும் கூட்டாக இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளன. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.  

பயங்கரவாத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமை இனி இல்லை. இனி செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளது. உலக நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பது பயங்கரவாதத்தை உற்சாகப்படுத்துவதாகும்" என பிரதமர் மோடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்