Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருமான வரி: 31ம் தேதி கடைசி நாள்

ஜுலை 18, 2019 04:20

சென்னை : கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது. கடந்த 2018 - 19க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்குக் குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கடந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆகியுள்ளது. இதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018 - 19ம் நிதியாண்டின் அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது. இதற்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 1000 ரூபாய், அபராதமும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர் டிச. வரை 5000 ரூபாயும், ஜன. முதல் மார்ச் வரை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை. வரி ஆதாயத்திற்கு பின் 2.5 லட்சம் முதல்5 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால் 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்கு வருமான வரி உண்டு. ஆனால் அந்த வரித் தொகையை தள்ளுபடி செய்வதற்கான சலுகை தான் நடப்பு 2019 - 20ம் நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

தலைப்புச்செய்திகள்