Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீ காஞ்சி ஆதி அத்திகிரி வரதர் வைபவத்தில் நேற்று ஒரே நாளில் 2.50லட்சம் பேர் சாமி தரிசனம்

ஜுலை 14, 2019 10:49

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதியை அத்திகிரி வரதர் பக்தர்களுக்கு வசந்த மண்டபத்தில் அருள்பாலிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 13 தினங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் மக்கள் குவிந்து காஞ்சி நகரமே திருவிழாக்கோலம் பூண்டது.

இன்று மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று அதிகாலையிலேயே இன்றும் அதிக அளவில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர் காலை 10 மணி நிலவரப்படி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று எம்பெருமான் ராமர் நீல வண்ண கலரில் பட்டு உடுத்தி மற்றும் பட்டுநூல் மற்றும் பஞ்சவர்ணம் மாலைகளலால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வருகின்றனர். 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை கேரள மாநில ஆளுநர் திரு சதாசிவம் மற்றும் பல்வேறு நீதிபதிகள் உயர் காவல் அதிகாரிகள், திரைப்பட நடிகர் சின்னிஜெயந்த் உள்ளிட்ட சாமி தரிசனம் செய்தனர்

இன்று அதிகாலை 2 மணி நேரம் மழை பெய்ததால் மிதமான தட்ப  வெட்ப நிலை நிலவுவதால் பக்தர்கள் சிரமம் இன்றி தற்போது வரை சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்