Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல்பட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஜுலை 14, 2019 07:16


செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகே காமராஜர் சிலை முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையிலும் செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் மத்திய அரசையும், பாஜக தலைமையையும் கண்டித்து மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவை ஆளும் மத்திய அரசு தங்களது  பணபலத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் அள்பலத்தையும் பயன்படுத்தி கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின்  சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி மிரட்டி பதவி ஆசை காட்டி  தங்கள் பக்கம் இழுத்து இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறது.

அது ஒருபோதும் நடக்காது காங்கிரஸ் காரர்கள் பணம் பதவி மிரட்டல் இதற்கெல்லாம் அடிபனியக்கூடயவர்கள் அல்ல என்றும் நிச்சயம் கோவாவிலும் கர்நாடகாவிலும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் பாஜகவின் கனவு ஒரு போதும் பலிக்காது என பேசினர் மேலும் பாஜகவை கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர் (சிறுபான்மை பிரிவு) ரியாய்பாய் வட்டார தலைவர் பால் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வல்லம் முருகன் மறைமலைநகர் தனசேகர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்