Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருள்மிகு கள்ளிச்சியம்மன், வேண்டவராசியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

ஜுலை 13, 2019 06:01

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த காயார் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளிச்சியம்மனுக்கும், வேண்டவராசியம்மனுக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்திருக்கோவிலானது சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இதையடுத்து முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி பூஜை, விநாயகர் வழிபாடு, புனித நீர் ஊற்றுதல், நிகழ்ச்சி நடைபெற்றது.

அபிஷேக, ஆராதனைகள், மஹா பூர்ணாகுதி  நடைபெற்ற பின்னர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்து சென்று கலசங்கல் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கருவறையில் உள்ள அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்