Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

ஜுலை 13, 2019 04:13

கும்பகோணம்:  கும்பகோணத்தில்  மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்திற்கு அரசு பட்டமேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜேஷ்ராம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் விஸ்வேஸ்வரன்  இதில் மருத்துவர்கள் மோகன், சரத்சந்திரன், தருண், அருட்செல்வன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கிட வேண்டும், MCI விதிப்படி மட்டுமே அல்லாமல், நோயாளிகள் சேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணி இடங்களை அரசாணை 4D.2 வில் உள்ளதை அமுல் படுத்தவும்,  அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணிஇட கலந்தாய்வு நடத்த வேண்டும், தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட, அரசு மருத்துவர்களுக்கு   பட்டமேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான டாக்டர்கள் கண்டன கோஷமிட்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை என்றால், வரும் 15,16 இரண்டு நாட்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதமும், 18ந்தேதி   தமிழகமெங்கும் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரிகளில் புறநோயாளிகள் (OP) புறக்கணிப்பு  போராட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் ராஜேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்