Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கம் அருகே நரிக் குறவர்களுக்கு குடியிருப்பு வீடுகள்: மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

ஜுலை 12, 2019 09:30

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் கிராமத்தில் உள்ள நரி குறவர் மக்களுக்கு ரூபாய் 1 கோடி 76 லட்சம் மதிப்பீட்டில் 84 பயணாளிகளுக்கு  குடியிருப்பு வீடுகள் கட்ட கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் சாலையோரத்திலேயே குடி இருந்து வந்த நிலையில் திருவள்ளுவர் நகர் தேசிய நெடுஞ்சாலை அருகில் சொந்தமாக வீட்டுமனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடு கட்டுவதற்காக ஒரு பயனாளிகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் வேதம் 84 பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடியே 76 லட்சம் மதிப்பிலான புதிய வீடு கட்டுவதற்க்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் நரிக்குறவர் இன மக்களிடம் ஒன்றாக அமர்ந்து அவளுடைய பாரம்பரிய மணிக்கட்டும் தொழிலை கேட்டு அறிந்து தானும் மணி கட்டி வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் விழாவின்போது நரிக்குறவ இன மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது பாரம்பரிய மணிகளை மாலையாக அணிவித்து மகிழ்வித்தனர். அதையடுத்து 84 நரிக்குறவ இன மக்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
 

தலைப்புச்செய்திகள்