Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புகழ்பெற்ற விட்டல் ருக்மணி சமஸ்தான் கோயிலில் ராம நாம கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வழிபாடு

ஜுலை 12, 2019 06:43

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் கோவிந்தபுரம் புகழ்பெற்ற விட்டல் ருக்மணி சம்ஸ்தான் கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற பாண்டுரங்கர் சுவாமிக்கு ஆண்டுதோறும் அச்சான ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் வராகரி யாத்திரை நிகழ்ச்சியும் நடைபெறும். 

பெருமாள் ஆஷான ஏகாதசி முதல் 4மாதங்கள் சயன கோலத்தில்  யோகநிலையில் பக்தர்களுக்கு அருள்தருவார். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷான  ஏகாதசியான இன்று நாட்டின் பல வைணவத் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் குறிப்பாக பண்டரிபுரம் பாண்டுரங்கனை  பக்தர்கள் 200 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து தரிசனம் மேற்கொள்வார்கள். 

அந்த வகையில் இப்பகுதியிலுள்ள கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயிலுக்கு  கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் இருந்து பாண்டுரங்கன் ருக்மணி தாயார் ரத யாத்திரையுடன்   பக்தர்கள் நாம கோஷங்கள் நாம கீர்த்தனைகள் பாடியவாறு பாதயாத்திரையாக கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சம்ஸ்தான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.


இக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற பாண்டுரங்கன் ருக்மணி தாயார் மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களுடன் வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 

திருமணமாகாதோர் இந்த உற்சவத்தில் பங்கேற்று  சுவாமி அம்பாளுக்கு மாலைகள் சாற்றி வழிபட திருமணத் தடை நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இவ்வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் பக்தர்களின் நாம சங்கீர்த்தன பஜனைகளும் நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்