Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நியூஸ் பிரிண்ட் வரியை வாபஸ் பெற வேண்டும்: ஐஎன்எஸ்

ஜுலை 09, 2019 07:43

புதுடெல்லி: இறக்குமதி செய்யப்படும் செய்தி்தாள் அச்சிட பயன்படும் காகிதங்களுக்கு (நியூஸ் பிரிண்ட் பேப்பர்) விதிக்கப்பட்ட 10 சதவீத சுங்கவரியை வாபஸ் பெற வேண்டும் என இந்திய பத்திரிகைகள் சங்கம் (ஐஎன்எஸ்)  வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: செய்தித்தாள் அச்சிடப்பயன்படும் காகிதங்களுக்கு (நியூஸ் பிரிண்ட் பேப்பர்) இறக்குமதிக்கு பட்ஜெட்டில் 10% வரி விதிக்கப்பட்டது. விளம்பரம் வருவாய் குறைவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் செலவு அதிகரிப்பு போன்றவை காரணமாக செய்தித்தாள் மற்றும் இதழ்கள் வெளியீட்டாளர்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 

எனவே, நியூஸ் பிரிண்ட்  பேப்பர்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி விதிப்பால், சிறு பத்திரிகைகள் இழப்பை சந்தித்து மூடும் நிலைக்கு தள்ளப்படும். இந்தியாவில் செய்தி தாள்களின் தேவை ஆண்டுக்கு 2.50 மில்லியன் டன் என்ற நிலையில், உள்நாட்டில் 1 மில்லியன்  அளவுக்கே உற்பத்தி செய்யப்படுகிறது. இலகு ரக செய்தி தாள்கள் இங்கு தயாரிக்கப்படுவதில்லை. எனவே, 10 சதவீத வரியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்