Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

ஜுலை 04, 2019 07:24

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான நான்கு மாத செலவீனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட் இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து நாளை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதிமந்திரி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

மத்திய பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமானவரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் கட்டிடத்துறை, சேவை, குறு - சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கும், நீர் ஆதார நிர்வாகத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்