Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கம் பதவி ஏற்பு விழா

ஜுலை 03, 2019 10:36

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஹெரிடேஜ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 2019 2020 ஆண்டிற்கான பதவி ஏற்பு விழா ராயாஸ் கிராண்ட் நடைபெற்றது. இவ்விழாவில் தலைவராக பிரபாகரன் செயலாளராக நிசார் பாஷா பொருளாளராக விஜய்சங்கர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர்கள் மணிமாறன் மணிகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்ற பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் திருப்புவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுபாஷ் என்பவருக்கு மூன்று சக்கர வண்டி, திருவிடைமருதூர் திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 நபருக்கு பள்ளி சீருடை, செல்வி என்கிற ஏழைப்  பெண்ணுக்கு தையல் இயந்திரம், திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மூன்று மாணவிக்கு தலா ரூ15,500 கல்வி உதவித்தொகை வங்கப்பட்டது.

மேலும் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு 10,000 உதவித்தொகை அரசுப் பள்ளி மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை (ஸ்கூல் பேக்), அன்னை கருணை இல்லத்தில் படிக்கும் 40 மாணவர்களுக்கு உணவுப் பொருட்களும் புத்தகப் பையும் வழங்கப்பட்டது மொத்தம் 3 லட்சத்திற்காண நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்