Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் அருகே சுவாமிமலை, சோழபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டம்

ஜுலை 03, 2019 10:31

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும் சுவாமிமலை, சோழபுரத்தில் இரு இடங்களில் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

 

கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன் குடந்தை அரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவினர் காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், மற்றும் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளித்ததைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவிக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்ப்புக் குழுவினர் வலியுறுத்தினர்.


இதே போன்று சுவாமிமலை தேரடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர்  விமல்நாதன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த காத்திருப்பு போராட்டங்களில் எராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்