Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக என்.எஸ்.விஸ்வநாதன் மீண்டும் நியமனம்

ஜுலை 01, 2019 01:18

புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கி

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்ததாஸ் பதவி வகிக்கிறார். துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சாரியா கடந்த மாதம் 24-ம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அந்த பதவியில் முன்னாள் துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஓராண்டு இந்த பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்