Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நல்வாழ்வு வாழ வழிகாட்டும் காரணயில் மடம் ஸ்ரீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் திருக்கோயில்

ஜுன் 29, 2019 08:45

வரலாற்று சிறப்பு மிக்க பல புண்ணிய தலங்களின் தன் அருமை பெருமைகள் ஒன்று சேர, வானுயர்ந்து கம்பீரமாக நிற்கும் பிரமாண்டமான கோவில் மண்ட பத்தில் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட சிற்பங்களின் சிறப்புடன் எட்டுமன காரண யில் மடம் விஷ்ணுமாயா சாத்தன் திருகோயில் இன்ற ளவும் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. 

தஞ்சை சிற்பக்கலையழகும், கேரள இயற்கை அழகும் ஒன்று சேர்ந்து மகத் தான சிலையம்சம் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்விஷ்ணுமாயா குட்டிசாத்தன் திருக்கோவில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட் டம் எட்டுமன கிராமத்தில் ‘கருவன்னூர் புழை’ என்னும் ஆற்றங்கரை ஓரத்தின் நடுவே இரு புறமும் பச்சை பட்டு விரித்தாற் போல் தெரியும் வயல்வெளி நடுவில் காரணயில் மடம் என்ற பெயரில் விளங்குகிறது. 

இங்கு அமைந்திருக்கும் சாந்தமான சூழ்நிலை,  பக்திபரவசம், நன்னெறி சிந்தனைகள் போன்றவற்றால் அனை வரையும் தன்வசப்படுத்தும் பெருமை வாய்ந்த தாகும் இந்த புண்ணிய பூமி.  இப்புண்ணிய பூமியில் அமைந்திருக்கும் காரணயில் மடம் ஸ்ரீ விஷ்ணு மாயா குட்டிச்சாத்தன் திருக்கோயிலின் முகப்பு அலங்கார வளைவில், ஸ்ரீ அய்யப்பன் முருகன் போன்ற மூர்த்திகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  

இவ்வலங்கார வளைவு நுழைவு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஏராள மான விசுவரூபதரிசன சிலை களைக் காணலாம். இடப் பக்கம் சப்தஸ்வர சமாதி மண்டபமும், வலது பக்கம் இராஜகோபுரமும் அமைந்திருகின்றது. இந்த இராஜ கோபுரத்திலும் விதவிதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. மண்டபம் தாங்கி நிற்கும் பிரம் மாண்ட தூண்களிலும் உள்ள சிற்பங்கள் பாற்போரை பிரமிக்க வைக்கும்.  

முக்கியமாக ஸ்ரீ குட்டிச்சாத்தன் தன் தாய் தந்தையான சிவ,பார்வதியுடன் சேர்ந்து ஆசி வழங்கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். கோவில் வளாகத் தில் உபதேவதைக ளான பத்ரகாளி, பிரம்ம இரச்சஷ், நாகராஜா, புவனேஸ்வரி அன்னை போன்ற ஆராதனா விக்கிரங்கங் களும் அத்துடன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட திருசன்னதிகளும் உள்ளன. 

பித்தளை தகிடால் வேயப்பட்ட ஸ்ரீ கோவில்: கலைநயத்துடன் கூடிய மிக விசாலமான இத்திருக் கோவில் முழு வதும் பித்தளை தகிடினால் அலங்கரிக்கப்பட் டுள்ளது. இப்பித்தளை கவசத்தால் உரு வான பிரகாச மானது ஒளிவட்ட நிலவை போன்று ஜொலிக் கின்றது. இந்த கர்பகிர கத்தில், ஐபொன்னில் சாத்தன் சாமியின் உருவம் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  

முன்மடாதிபதி பிரம்மஸ்ரீ பத்மநாப சாமியின் திருவுருவ வெங்கல சிலை: கிட்டத்தட்ட 50 ஆண்டுக ளாக மடாதிபதி யாக விளங்கிய பத்நாபன் சாமி இக்கோ விலின் வளர்ச்சிக்காகவும், சாத்தன் சாமியின் புகழை பரப்பவும் அருள்பணியாற்றினார். இவரின் திருவுருவ வெங்கல சிலை சமாதி மண்டபம் கோவில் வளாகத்திலேயே அமைக்கப் பட்டுள்ளது.  

இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூணும், சங்கீத உபகரணமான தம்புராவின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சங்கீத சுரங்களின் சங்கமத்தை உணர்த்தும் வகையில் இந்த சப்தஸ்வர மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மஸ்ரீ பத்மநாபன் சாமியின் வெங்கல் சிலை மூன்றரை அடி உயரம் கொண்டதாகும். இந்த வெங்கல சிலை உருவாக்கியது ஸ்தபதி திரு.சிவன் அரூர் ஆவார். திருச்சி பெரியசாமி ஸ்தபதியும், அவருடன் சேர்ந்து பத்துபேரும்தான் கோவிலில் சிலை வடிவமைத்தவர்கள். 

திருச்சூர் சக்தன் தம்புரான் பேருந்து நிலையத் திலிருந்து கொடுங்கல்லூர் இரி ஞாலக்குடா ஊரகம் மார்க்கமாக செல்லும் சாதாரண பேருந் தில் ஏறி இராஜா செண்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மேற்கு தார் சாலையில் 1 கிலோ மீட்டர் சென்றால் எட்டுமனா நான்கு வழி சந்திப்பி லிருந்து வலது பக்கம் பாதையில் சென்றால் மிக பிரமாண்டமான அலங்கார வளைவும், கோவில் மண்டபமும் காணலாம்.  

ஆலமரம், பால மரம், சப்தஸ்வர சமாதி மண்டபமும் விசேஷமானதாக அமைந்தி ருக்கிறது. சாத்தானின் தீய சக்தியினாலும், நவகிரஹ தோஷத்தினாலும் மற்ற செயற்கை யாக ஏவப்படும் கெடுதல், அமைதியற்ற சூழ்நிலை, முன் ஜென்ம சாபம்,  திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியமின்மை, தொழிலில் தடை ஏற்படுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு இங்கு தகுந்த பரிகாரத் தோடு தீர்வு காணப்படுகிறது.  
மேலும் தனவிரயம், சத்ரு தோஷம் போன்றவற்றால் மனநிம்மதி இழந்து வாழ்வின் விரக்திக்கு செல்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை காரணயில் மடம் நோக்கி வந்தால் போதும் மனமகிழ்ச்சி ஏற்படும் என்கிறார்கள். இங்கு சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி பிரார்த்தனை கள் செய்யப்படுகிறது. 

எனவே காரணயில் மடம் ஸ்ரீ விஷ்ணு மாயா அக்குட்டிசாத்தன் சந்நதிக்கு பக்தி சிரத்தையுடன் வந்து வணங்கி பகவானின் அருள் வாக்குபடி பரிகாரம் செய்து அருளாசி பெற்று வாழ்வை வளமாக்கி கொள்ளலாம் என்றும். நேரில் வர முடியாதவர்கள் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்  என்கிறார்கள் அக்கோயில் நிர்வாகிகள். 

பழமை வாய்ந்த விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் திருக்கோவில்களில்  முக்கியமான காரணயில் மடம் குட்டிச்சாத்தன் கோவிலில் பாரம்பரிய ஆச்சார அனுஷ் டானங்களுடனும், பூஜா விதிகளின்படியும் இன்றளவும் பூஜைகள் செய்வதில் முக்கியபங்கு வகித்து வருகிறது.

காரணயில் மடம் கோவிலில் நித்திய  பூஜைகளாக காலை 5.30 மணிக்கு நடை திறப்பு, சுத்திகலச பூஜை, அபிஷேகம், நிவேதனம், 11மணிக்கு, 12மணிக்கு அன்னதானம். மதியம் 12.30 மணிக்கு சாத்தன் சாமியின் "அருள்வாக்கு".

1.30 மணிக்கு நடை அடைப்பு.
மீண்டும் நடை திறப்பு மாலை 6 மணி. 6.30க்கு தீபாராதனை
இரவு 7.45 மணிக்கு நடை அடைப்பு.
மேலும் தகவல்ளுக்கு: 0487 2342693,  09995509000

தலைப்புச்செய்திகள்