Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் வரும் 4 ம் தேதி முதல் 500 புதிய பேருந்துகள் இயக்கம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஜுன் 27, 2019 11:39

கரூர்: வரும் 4 ம் தேதி முதல் இன்னும் 500 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இயக்கி வைக்க உள்ளதாகவும், 5 ஆயிரம் புதிய பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்குகின்றன என்றும், இன்னும் புதிய பேருந்துகள் வேண்டி கோரிக்கை போக்குவரத்து துறை மானியக்கோரிக்கையில் வைப்போம் என்றும் கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் 5 பள்ளிக்கட்டிட திறப்பு விழா மற்றும் ஐயர்மலை அரசு கலைக்கல்லூரியில் பூமி பூஜை விழாவும் என்று 3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களையும், பூமி பூஜையையும் தொடக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அப்போது வரும் 25 ம் தேதி, போக்குவரத்து துறைக்கான மானியக்கோரிக்கைகள் நடைபெற உள்ளன. அந்த கோரிக்கைகளில் போக்குவரத்து துறைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றும், ஜெயலலிதாவின் அரசு 5 ஆயிரம் புதிய பேருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. 

இதில், 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன என்றும், இன்னும் ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டுமென்றும்., மேலும்,வரும் 4 ம் தேதி, தமிழக முதல்வர் 500 பேருந்துகளை இயக்கி வைக்க உள்ளார் என்றும் இந்த நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வேண்டுமென்றும் கோரிக்கை வைப்போம் என்றும் அதையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ சசிகலா ரவி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்