Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 26, 2019 10:09

கும்பகோணம்: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ மீத்தேன் கெயில், ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அழிவு திட்டங்களை வெளியேற்ற வேண்டும் என்று எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

கும்பகோணத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அழிவு திட்டங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் பெரும்பாலும் சாமான்ய மக்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் திட்டங்களாகும்,

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுமாகவே இருக்கின்றன. இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவதில் மோடி அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்தில் பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களையும் அனு உலைகள் ஆபத்தான அணுக்கழிவு மையங்கள் அமைத்து நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களையும் நியூட்ரினோ பெயரில் தேனி மதுரை மாவட்டங்களையும் கெயில் எரிவாயு திட்டத்தின் பெயரால் கொங்கு மாவட்டங்களையும் சாகர்மாலா இடத்தின் பெயரால் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்க நினைக்கிறது.

 மக்கள் விரோத மத்திய பாஜக அரசு இப்படி தமிழகத்தில் மண்டலம் வாரியாகஅறிவு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவின் சோதனை கூடமாக மாற்றி வருகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாட்பட்ட இதில் மாவட்ட தலைவர் பைசல் முகம்மது பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாலைவனமாக்கும் திட்டங்களை கைவிடுமாறு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
 

தலைப்புச்செய்திகள்