Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிலேயே முதல் முறையாக 200 கிலோ பித்தளையில் வடிவமைக்கப்பட்ட விமானம்

ஜுன் 26, 2019 08:28

கும்பகோணம்: கும்பகோணத்தில்  நாச்சியார்கோவிலில் இந்தியாவிலேயே முதல் முறையாக 200 கிலோ பித்தளையில் வடிவமைக்கப்பட்ட விமானம் திருச்செந்தூர் குமரன் கோயில் சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் நாச்சியார்கோவில் சோழா சிற்ப கலைக்கூடம் உள்ளது. 

இதன் உரிமையாளரான விஜயகுமார் (62) புதுடில்லியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து நாச்சியார்கோவில் திரும்பிய விஜயகுமார் சிற்பக்கலை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூரில் உள்ள குமரன் கோயிலின் திருவிழாவில் சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்காக விமானம் (ஏரோபிளேன்) வாகனம் செய்து கொடுக்கும்படி கேட்டு கொண்டனர்.

அதன்படி 200 கிலோ சுத்தமான பித்தளையை கொண்டு ஏரோபிளேன் வடிவத்தில் ஐந்தரை அடி அகலம், 6 அடி நீளத்தில் வாகனத்தை செய்துள்ளனர். ஸ்தபதி விஜயகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 மாதங்களாக இப்பணியை தொடர்ந்து செய்தனர்.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், இதுவரை இல்லாத வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக முழுவதும் சுத்தமான இந்த பித்தளையை கொண்டு சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்கு ஏரோபிளேன் வாகனம் செய்யப்பட்டுள்ளது.

பணிகள் முடிவடைந்த நிலையில் ஓரிரு நாளில் திருச்செந்தூர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு விரைவில் நடக்கவுள்ள திருவிழாவில் சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளனர் என்றார்.

தலைப்புச்செய்திகள்