Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மக்கள் கட்சி சார்பில் அம்மன் வேடம் அணிந்து பேரணி

ஜுன் 24, 2019 10:49

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில்  பக்தபுரி தெரு ரவுண்டானா அருகில் இருந்து அக்கட்சியின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. 

இதில் மாவட்ட பொது செயலாளர் கலியமூர்த்தி மாணவரணி செயலாளர் லோகேஷ் மாணவரணி அமைப்பாளர் அரவிந்த்  மகளிர் அணி செயலாளர் ஜீவா மாவட்ட அமைப்பாளர் காளிதாஸ் திருபுவனம் நகர தலைவர் கார்த்தி செயலாளர் ஆனந்த் பொதுச் செயலாளர் கஸ்தூரி பாபநாசம் ஒன்றிய தலைவர் பெரியார் அஜித் மற்றும் நிர்வாகிகள்
பேரணியில் தமிழக அரசு ரம்ஜான் பண்டிகைக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்குகிறது.  இதேபோல் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். 

ஆடி மாதம் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில்  பெண்கள் அம்மனுக்கு கஞ்சி வார்ப்பது கூழ் ஊற்றுவது பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இது அம்மன் கோவில்களில் பாரம்பரியமாக நடக்கும் விழாவாகும்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்கு ஆன்மீகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு அரிசி கம்பு கேழ்வரகு திணை போன்ற தானியங்களை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. 

இதில் அம்மன் வேடமணிந்து தீச்சட்டி ஏந்தியும் இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்